புதுடெல்லி: இந்தியாவின் 2 என்எம் சிப் உலக சந்தையை புரட்டிப் போடும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தரவுகள் (டேட்டா) என்பது தற்போது கச்சா எண்ணெய்க்கு இணையாகவும் தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) என்பது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளாகவும் கருதப்படுகின்றன. தற்போது டேட்டா மற்றும் டேட்டா சென்டர்களே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இந்தத் துறையில் இந்தியா முன்வரிசையை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.