சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 68-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 13 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 6.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர்.