துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன், தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜவஹல் ஸ்ரீநாத் மேட்ச் ரெப்ரீயாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் இலிங்க்வொர்த், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிஸ் காஃபனி ஆகியோர் களநடுவர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. டி.வி. நடுவராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்பரோவும், இந்தியாவின் நித்தின் மேனன் 4-வது நடுவராகவும் செயல்பட உள்ளனர்.