துபாய்: உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.