உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 48-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மானவ் தாக்கர், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹரிமோட்டோ டொமோகாஸுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய மானவ் தாக்கர் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 130-வது இடத்தில் உள்ள தென் கொரிய வீராங்கனை பார்க் கஹியோனுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 8-11, 7-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீராங்கனையான தியா சித்தலே 3-7, 7-11, 6-11, 11-6, 5-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சென் ஐ ஷிங்கிடம் வீழ்ந்தார்.