பாரிஸ்: 29-வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் வென்றது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் சாட்விக்-ஷிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடியுடன் மோதியது. இதில் லியு யீ-சென் போயாங் ஜோடி 21-19, 18-21, 21-12 என்ற கணக்கில் சாட்விக், ஷிராக் ஜோடியை வீழ்த்தியது. அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய ஜோடிக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.