ஸ்டாக்ஹோம்: உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் சுசுமு கிடாகவா, மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்ட மைப்பை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் உருவாக்கிய கட்டமைப்பில் உள்ள பள்ளங்களில் மூலக்கூறுகள் உள்வந்து வெளியே செல்லும். பாலைவனப் பகுதி காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கவும், தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றவும், கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கவும், ஹைட்ரஜனை சேமிக்கவும், இந்த உலோக -கரிம கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.