மாஸ்கோ: உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 2 பேரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய பெடரல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளும் ரஷ்யாவிற்குள் நுழைய தவறான தகவல்களை வழங்கியுள்ளனர். இதனால் அவர்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருவரும் மேற்கொண்ட உளவுத்துறை, நாசவேலைகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நிலத்தில் பிரிட்டிஷ் உளவு துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான போருக்கு பின் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில் 2 தூதரக அதிகாரிகளை வெளியேறும்படி ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. 2 அதிகாரிகளின் பெயர்களோ அல்லது அவற்றுக்கான ஆதாரங்கள் எதையும் ரஷ்யா வெளியிடவில்லை.
The post உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 2 பேர் நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா உத்தரவு appeared first on Dinakaran.