உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த விருத்தாசலம் ரோடு மேம்பாலம் அருகில் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் விருத்தாசலம் செல்வதற்கு வசதியாக பிரிவு சாலை போடப்பட்டுள்ளது. இதன் வழியாக அனைத்து பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்த பிரிவு சாலையில் ஒரு கார் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதிக விபத்துகள் நடைபெறும் வளைவு பகுதியில் இந்த கார் நிறுத்தப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.இது யாருக்கு சொந்தமான கார்? எதற்காக முக்கிய சாலையில் நிறுத்தினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
The post உளுந்தூர்பேட்டை அருகே பிரிவு சாலையில் 3 நாட்களாக நிற்கும் கார்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.