பணி செய்ய விருப்பமில்லை என்று உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்தவர் சரவணன். இவர், கடந்த 11-ம் தேதி தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். "காவல் துறையில் 16 ஆண்டுகளாக நன்முறையில் பணிபுரிந்து வருகிறேன். திருவாடானை காவல் உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து பணிகளை வழங்கி, எனது நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட காவலர்களில் 10 பேர், அனுமதியின்றி அயல்பணியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.