புதுடெல்லி: சுதேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன்படி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘அலுவலக பயன்பாட்டுக்காக உள்நாட்டு மென்பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறிவிட்டேன்’’ என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியையும் அவர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்.