சென்னை: ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த திட்ட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை இருக்கிறது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4 கவுன்சிலர்கள் உள்பட நகர்ப்புற உள்ளாட்சிகளில் 133 பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தேசம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சி, வேலூர், நெல்லை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் முன்னேற்பாடுகள் செய்ய அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்குத் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
The post உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.