புதுடெல்லி: உ.பி. கிராமம் ஒன்றில் ரமலான் மாத நோன்புக்காக முஸ்லிம் களை ஓர் இந்து விவசாய குடும் பம் அதிகாலையில் எழுப்பி வரு கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மதநல்லிணக்கப் பாரம்பரி யம் தொடர்கிறது.
உ.பி.யின் வாராணசி அருகே உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரம் பனாரஸ் பட்டு சேலை நெசவுக்கு பெயர் பெற் றது. இதன் ஒரு பகுதியான கவுடியா கிராமத்தில் குலாப் யாதவ் (45) குடும்பம் வசிக்கிறது.
இந்நிலையில் புனித ரமலான் மாதத்தில் குலாப் யாதவ் தனது 12 வயது மகன் அபிஷேக் யாதவுடன் அதிகாலை 2.30 மணிக்கு டார்ச் லைட், கம்புடன் வீட்டிலிருந்து புறப்படுகிறார். முஸ்லிம் வீடுகளின் கதவுகளை தட்டி ரமலான் நோன்புக்காக அவர்களை எழுப்புகிறார்.