நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.