*பொதுமக்கள் சாலை மறியல்
ஊட்டி : தனியார் ஓட்டலுக்கு விதிமுறைகளை மீறி குடிநீர் இணைப்பு வழங்கியதை கண்டித்து ஊட்டி – கோத்தகிரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மதுவானா சந்திப்பு பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு குடிநீர் இணைப்பு நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சாதாரணமாக சிறிய குழாய்கள் மூலமாகவே இணைப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்த ஓட்டலுக்கு மட்டும் 2 இன்ச் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதுமான தண்ணீர் செல்லவில்லை எனத் தெரிகிறது.
இதனை தொடர்ந்து, தனியார் ஓட்டலுக்கு பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ேமலும், அந்த குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி கவுன்சிலர் அனிதா உட்பட பொதுமக்கள் ஊட்டி – கோத்தகிரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதகாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியலால்,ஊட்டி – கோத்தகிரி சாலையில் நேற்று பிற்பகல் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post ஊட்டியில் தனியார் ஓட்டலுக்கு விதிமுறை மீறி குடிநீர் இணைப்பு appeared first on Dinakaran.