ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் எதிரெதிரே அதிவேகமாக சென்ற அரசு, தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்கள் உள்பட 44 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, தனியார் பஸ் ஒன்று ஊத்தங்கரை நோக்கி சென்றது. கார்த்திக்(33) என்பவர் ஓட்டிச்சென்றார். ஊத்தங்கரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ், கிருஷ்ணகிரி சென்றது. டிரைவர் விஜயகாந்தன் (39) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக வெங்கடேசன் (53) இருந்தார்.
இந்த இரு பஸ்களும் நேற்று மாலை 4.40 மணிக்கு ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் பகுதிக்கு வந்தது. வேகமாக வந்த இரு பஸ்களும், ஒரே சமயத்தில் பாலத்தின் உள்ளே சென்றபோது நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள், கண்டக்டர், பயணிகள் உட்பட 44 பேர் படுகாயம் அடைந்தனர். குறுகிய பாலம் என்பதால் பொக்லைன் இயந்திரம் வரவழைத்து நொறுங்கிய பஸ்களை பிரித்து, வெளியே கொண்டுவந்தனர். இதில் தனியார் பஸ் டிரைவர் கார்த்திக்கிற்கு 2 கால்களும் முறிந்தது.
The post ஊத்தங்கரை அருகே பரபரப்பு ரயில்வே தரைப்பாலத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 44 பேர் படுகாயம் appeared first on Dinakaran.