சென்னை: ஊரக வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை கண்காணிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கினைப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவானது திஷா கமிட்டி என அழைக்கப்படுகிறது. இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறையின் செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழுவானது சீரான இடைவெளியில் கூடி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கின்றன. இந்த திட்டத்தின் செயல்பாடுகள், இடர்பாடுகள், எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, திட்டத்தை செயல்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான திஷா கமிட்டி ஆலோசனை கூட்டம் தொங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில் திஷா கமிட்டி உறுப்பினரான அதிமுக எம்.பி. தம்பிதுறை பங்கேற்காத நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள எண் வழங்குவது குறித்து ஆலோசனையில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post ஊரக வளர்த்தித்துறை தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு appeared first on Dinakaran.