பெல்கிரேட்: செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மிலாஸ் வுசெவிக் ராஜினாமா செய்துள்ளார். செர்பியாவில் நோவிசாட் நகரில் கடந்த நவம்பர் மாதம் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக கூறி போராட்டங்கள் வெடித்தன. பல வாரங்களாக ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. பிரதமர் வுசெவிக்கின் எதேச்சதிகார ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதை பிரதிபலிப்பதாக இந்த போராட்டம் மாறியுள்ளது. இந்நிலையில் பிரதமர் வுசெவிக் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜினாமா செய்வது எனது நிபந்தனையற்ற முடிவு என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் முன்கூட்டியே ராஜினாமா செய்வது நாடாளுமன்ற கூட்டத்துக்கு வழிவகுக்கும். புதிய அரசை தேர்ந்தெடுக்க அல்லது உடனடி தேர்தலை நடத்துவதற்கு 30நாட்கள் அவகாசம் வழங்குவதற்கு பிரதமரின் ராஜினாமா நாடாளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
The post ஊழலுக்கு எதிராக போராட்டம் செர்பியா பிரதமர் ராஜினாமா appeared first on Dinakaran.