மும்பை: “மறைந்த மன்மோகன் சிங் ஊழலுக்கு எதிரானவர். அவர் எப்போதும் நாடு மற்றும் சமூகத்தின் நலனுக்காக முன்னுரிமை அளித்தவர்” என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவின் அஹிலியாநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, “மன்மோகன் சிங் ஊழலுக்கு எதிரானவர் அதோடு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் தொடர்பாக உடனடி முடிவுகளை எடுத்தவர். அவர் எப்பொழுதும் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களுக்காக எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதைப் பற்றியே சிந்தித்தார். நாடு மற்றும் சமூகத்தின் நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.