இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-பாகிஸ்தானை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில் இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் பகை உள்ளது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தை குறைப்பதற்கு ஊக்குவிக்க முயற்சிப்பதாகும்.
ஆனால் போரின் நடுவில் நாம் சென்று தலையிடப்போவதில்லை. அடிப்படையில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, நமது கட்டுப்படுத்தும் திறனுடன் எந்த தொடர்பும் இல்லாத போரின் நடுவில் சென்று நாம் ஈடுபடப் போவதில்லை. இந்தியர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்வதற்கு அமெரிக்காவால் முடியாது. அதேபோல் பாகிஸ்தானையும் சொல்ல முடியாது. எனவே ராஜதந்திர வழிகள் மூலமாக இந்த விவகாரத்தை தொடரப் போகிறோம்” என்றார்.
The post எங்களுக்கு சம்பந்தமில்லாத போரில் இருந்து விலகி இருப்போம்: அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கருத்து appeared first on Dinakaran.