சில தலைவர்கள் சொந்தக் கட்சியை வளர்க்க மெனக்கிடுவார்கள். ஆனால், தங்கள் கட்சியை வளர்க்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெனக்கிட்டு வேலை செய்வதாக உற்சாகப்படுகிறார்கள் தருமபுரி பாமக-வினர்.
தருமபுரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் எம்ஆர்கே, தருமபுரிக்கு வரும்போதெல்லாம் பாமக-வினரை சீண்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், பாமக-வை தாக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் தெரிவிக்கும் கருத்துகளால் தங்கள் கட்சியின் வலிமை அதிகரித்து வருவதாகவும், வேற்றுமைகளை மறந்து தங்களை ஒற்றுமைப்படுத்தி வருவதாகவும் மாவட்ட பாமக-வினர் மகிழ்ந்துபோய்ச் சொல்கிறார்கள்.