சென்னை: எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி, விஜயபாஸ்கர், வேல்முருகன் உள்ளிடோர் எச்.எம்.பி.வி. வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்த்துள்ளார். அப்போது பேசிய அவர்;
சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. எச்.எம்.பி.வி. வைரஸ் சாதாரணமான ஒன்றுதான்; வீரியத் தன்மை உள்ள வைரஸ் இல்லை. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. 4 அல்லது 5 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடுகிறது. பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.