வாஷிங்டன்: எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டில், ட்ரம்ப் இந்தத் திட்டத்தை கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் வெடிக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.