சென்னை: காலை முதல் இரவு வரை பல பொய்களை கூறி திமுக அரசை களங்கப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். அண்ணா பல்கலை. மாணவி வழக்கை அதிமுக பூதாகரமாக்க முயன்றது; ஆனால் அது பிசுபிசுத்துவிட்டது. ஈ.சி.ஆரில் நடந்த சம்பவத்தை திமுகவுடன் தொடர்புபடுத்தி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு கீழ்த்தரமாக உள்ளது. ஈசிஆர் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முக்கிய நபர் சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என அவர் கூறினார்.
The post எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.