செங்கல்பட்டு: “நாடாளுமன்றத்தில், அதிமுக உறுப்பினர்கள் போல பாஜக அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழகத்தின் உரிமைகளுக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் நிருபித்திருக்கிறார்கள். நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்? என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இனி, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 11) செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.