சென்னை: எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடுவோம்! சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுள்ளார். சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், அவர் எக்ஸ் தள பக்கத்தில் அம்பேத்கர் குறித்து உறுதிமொழி தெரிவித்தார். அதில்,
சவாலாகச் சொல்கிறேன்!
இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்குப் பட்டியல், பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களைக் கடந்த 3 ஆண்டுகளில் நமது திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடுவோம்! சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம்!
மதவெறி – சாதிவெறி சக்திகளின் எண்ணம் திராவிட வழித்தோன்றல்கள் இருக்கும் வரை இம்மண்ணில் நிறைவேறாது! இது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மீது நாங்கள் எடுக்கும் உறுதிமொழி என தெரிவித்தார்.
The post எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடுவோம்! சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி appeared first on Dinakaran.