ஈரோடு: “எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து 20-ம் தேதி, சீமான் அறிவிப்பு வெளியிடுவார்” என ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது: “விவசாயிகளும், நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சிகள் குறிப்பாக திமுக தான் காரணம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை என்று சீமான் என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். திராவிட கட்சிகள் பதவியை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தியதால், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.