தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் குறுகிய பார்வையுடன் கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்‌ஷா) திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்.20) கடிதம் எழுதியிருந்தார்.