சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.