புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் நடைபெறுகிறது, முக்கியமான பிரச்சினைகளை பேச நான் பலமுறை வாய்ப்பு கேட்டும் அவை மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "இங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பேச அனுதிக்குமாறு நான் அவருக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் (சபாநாயகர்) வெளியேறிச் சென்றுவிட்டார். அவையை நடத்துவதற்கான வழி இது இல்லை. சபாநாயகர் என்னைப் பேச விடாமல் வெளியேறிவிட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். அவர் அவையை ஒத்திவைத்தார். அதற்கான தேவையில்லை.