‘இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து அஜித் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.