“என் மீது சிம்பு வைத்துள்ள அன்பு, அக்கறை குறையவே இல்லை” என்று நடிகர் சந்தானம் உருக்கமாக பேசினார்.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார்.