ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா என பலர் நடித்துள்ள படம், ‘எமகாதகி’. இந்தப் படத்துக்கு சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கணபதி ரெட்டி இணை தயாரிப்பு செய்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கூறும்போது, “இது இறப்பு வீட்டில் நடக்கும் கதையை கொண்ட படம். கிராமம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் உடல் அந்த வீட்டை விட்டுப் போக மறுக்கிறது. அது ஏன், எப்படி என்பது கதை. என் கிராமத்தில் நடந்த விஷயங்களை வைத்து இதன் திரைக்கதையை அமைத்துள்ளேன்.