கடலூர்: தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யும்போது தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைத்தால் தமாகா முதலில் குரல் கொடுக்கும் என்று கடலூரில் ஜி.கே.வாசன் கூறினார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் கூறியதாவது:அனைத்து தரப்பினரும் மும்மொழி கொள்கையை கற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை. இதில் அரசியல் கூடாது.
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் அப்படியொரு நிலை ஏற்பட்டால் பல்வேறு வரையறைகள் கோட்பாடுகள் உள்ளது. அதன்படி தமிழகம் போன்ற மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் முதலில் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்பி தொகுதிகளை குறைத்தால் தமாகா முதலில் குரல் கொடுக்கும்: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.