எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
‘எம்புரான்’ திரைப்பட காட்சிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசியபோது, ‘‘முல்லை பெரியாறு அணை பேராபத்தை விளைவிக்கக்கூடியது. அந்த அணை உடைந்தால் கேரளா அழியும் என்பது போன்ற காட்சி, தற்போது திரையிடப்பட்டுள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதை எதிர்த்து ஏராளமான விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்’’ என்றார்.