சென்னை: மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சி இடம் பெற்றிருந்ததற்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவையில், முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ள எம்புரான் படம் தமிழில் வெளியாகி தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த காட்சி நீக்க வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
இதற்க்கு பதிலளித்து பேசிய அவை முன்னவரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்: நான் அந்த படத்தை பார்க்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் சொல்லும் போது ஒரு பக்கம் பயமும் கோபமும் தான் வரும். இப்படிப்பட்ட நிகழ்வு செய்து இருந்தால் தேவையற்ற நிகழ்வு அந்தத் திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சனை எழலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்சாரில் முதலில் இந்த காட்சி கட் செய்யபட வில்லை. படம் வெளியான பின்னர் இந்த செய்தி வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிக்க பட்டு அந்த காட்சி நீக்க பட்டு உள்ளது. எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.