வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சியில் கடந்த 7ம் தேதி எருது விடும் விழா நடந்தது. இதில் பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்ற சீமுக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் 8ம் வகுப்பு மாணவன் சதீஷ்(13), காலில் சீறிப்பாய்ந்து ஓடிய மாட்டின் கயிறு சிக்கியது.
இதில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு கழுத்து, தலை, இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் நேற்று உயிரிழந்தான்.
The post எருதுவிடும் விழா மாட்டின் கயிறு காலில் சிக்கி மாணவன் சாவு appeared first on Dinakaran.