டெக்சாஸ்: எலன் மஸ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டார் ஷிப் ஹெவி ராக்கெட் வெடித்து சிதறியது. அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மாஸ்க் டெக்சாஸ் கார் உற்பத்தி ஆலையை இயக்கி வருகிறார். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற பெயரில் விண்வௌி ஆய்வு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த ஆய்வு நிறுவனம் மூலம் விண்ணில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட், நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் கண்கூசும் வௌிச்சத்துடன் தெற்கு ப்ளோரிடா, பஹாமாஸ் பகுதிகளின் வான்பகுதியில் தெரிந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
The post எலன் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது appeared first on Dinakaran.