பூஞ்ச்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கட்டுப்பாடு கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவியதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 1ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி இந்தியாவுக்குள் ஊடுருவியது. இதனால் கிருஷ்ணா காட் செக்டாரில் ஒரு கன்னி வெடி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. இதற்கு நமது ராணுவம் முறையாக பதிலடி கொடுத்தது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.