காத்மண்டு: எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற இந்திய மலையேற்ற வீரர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார். நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான 8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மலை யேற்றக் குழுவில் இடம்பெற்றிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிலிப் சாண்டியாகோ(45) கடந்த 14ம் தேதி சிகரத்தை அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இந்நிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்த சுப்ரதா கோஷ் என்பவர் நேற்று எவரெஸ்ட் மலை உச்சியை அடைத்து விட்டு அங்கிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உடல் சோர்வடைந்து உயிரிழந்தார்.
The post எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய மலையேற்ற வீரர் மரணம் appeared first on Dinakaran.