திருவள்ளூர்: எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியில் கற்பித்தல், உணர்ச்சி நுண்ணறிவு குறித்த ஆசிரியர் மேம்பாட்டுத்திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது. திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘கற்பித்தல் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு’ என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி 2 நாட்கள் கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதில், கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியில் நவீன கற்பித்தல் உத்திகள், உறுதியான விவரக்குறிப்பு மற்றும் வழிகாட்டுதல் நுட்பங்களை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் முதல்நாள் நிகழ்வில் நடைபெற்றன. இந்த நிகழ்வு, பேராசிரியர்களின் கற்பித்தல் முறைகளைச் சுயபரிசோதனை செய்து செம்மைப்படுத்த ஊக்குவித்தது.
நேர மேலாண்மை, குழுப்பணி மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளை வளர்ப்பது, தொழில்முறை வளர்ச்சிக்கான நடைமுறைக் கருவிகள் ஆகியவை பற்றி 2ம் நாள் நிகழ்வு விளக்கியது. நடைமுறை அணுகுமுறை மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளுடன் நடைபெற்ற அமர்வுகள் அறிவூட்டுவதாகவும் சுவாரஸ்யமாகவும் விளங்கின. பேராசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் புதுமையான கற்பித்தல் உத்திகளைச் செயல்படுத்த புதிய உந்துதலையும் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
The post எஸ்ஏ கலை கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி appeared first on Dinakaran.