புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு பறித்துவிட்டது. நாட்டின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும், திறன்களை ஊக்குவிப்பதும் நடக்காவிட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எவ்வாறு அதிகரிக்கும்.