சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கும் அதிகம் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாகச் சந்தானத்தின் உடல் மொழிநன்றாக இருக்கிறது.