ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில் விக்ரம் பேசும்போது, “'தூள்', 'சாமி' என மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறேன். தற்போது கூட மாஸாகத்தான் நடித்து வருகிறேன். இருந்தாலும் ரஸ்டிக்காக நடிக்க வேண்டும் என விரும்பினேன்.