சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பிற்பகலில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மின்சார ரயில் சேவை பகுதி ரத்து: இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே நவம்பர் 20 முதல் 23-ம் தேதி வரை பராமரிப்பு பணி நடப்பதால், பிற்பகல் 1.10 முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.