சென்னை: தவெக பொதுக்குழு கூட்டம், வரும் 28-ம் தேதி சென்னையில் நடக்கிறது. பூத் கமிட்டி மாநாட்டை ஏப்ரல் மாதம் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். பின்னர், கடந்த பிப்.26-ம் தேதி கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதனிடையே கட்சியில், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.