சென்னை: வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.13-ம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாதக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஏப்.13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்குகிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.