நியூயார்க்: நியூயார்க்கில் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி டாக்டர் பி. அம்பேத்கரின் தினமாக மாகாண மேயர் அறிவித்துள்ளார். சட்ட மாமேதை மறைந்த அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் தினமாக அறிவிப்பதற்கான பிரகடனத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கையெழுத்திட்டுள்ளார். மேயரின் சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலக துணை ஆணையர் திலீப் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கலந்து கொண்டார். இது குறித்து அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக நியூயார்க் மேயர் அலுவலகம் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை அறிவிக்கிறது. இதற்காக நியூயார்க் மேயர் மற்றும் துணை ஆணையர் திலீப் சவுகான் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஏப்.14ல் நியூயார்க்கில் அம்பேத்கர் தினம் appeared first on Dinakaran.