சென்னை: “சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 95 சதவீதம் நீர் இருப்பதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது” என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
அசோசெம் சார்பில் எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் நீர் மேலாண்மையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான மண்டல அளவிலான நீர் மேலாண்மை கருத்தரங்கம் சென்னையில் இன்று (பிப்.20) நடைபெற்றது. இதில் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது: “சென்னையில் நாளொன்றுக்கு 1100 மில்லின் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.