ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. பல்வேறு சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படிரூ.1099க்கு ரீசார்ஜ் செய்தால் 200Mbps வரையிலான வேகத்தில் ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் கனெக்ஷன் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களை கொண்ட டிடிஹெச் கனெக்ஷனும் இந்த பிளானுடன் உண்டு.
இதனுடன் ஒருவருடத்திற்காக அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிகளில் சந்தாவும் இத்துடன் வழங்கப்படும்.
வழக்கமாக ஏர்டெல் பிளாக் சேவை போஸ்ட்பெய்ட் சிம் கார்டுடன் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ப்ரீபெய்ட் கனெக்ஷனுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.